fbpx

மக்களே கோடைக்காலம் தொடங்கியாச்சு?… அடிக்கும் வெயிலுக்கு சூட்டை தணிக்க இதுதான் பெஸ்ட்!… விவரம் உள்ளே!

கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் நமது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மோர் பெரிதும் உதவி செய்யும். அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இயற்கையான பழச்சாறு வகைகள் மற்றும் குளிர்ச்சியான பானங்களை பருகவேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். அந்தவகையில், உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் மோரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதையும், பல வகைகளில் மோரை எப்படி தயாரிப்பது என்பது குறித்தும் இந்த பதிவில் அறிந்துக்கொள்வோம்.

தயிர் மற்றும் நீரைக் கொண்டு தயாரிக்கப்படும் மோரில் 90 சதவீதம் நீரும், பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளும் உள்ளன. எனவே உடலில் நீர்ச்சத்தின் அளவை சமநிலையில் பராமரிக்க விரும்பினால், மோரை தினமும் குடித்து வாருங்கள். முக்கியமாக மோரை தினமும் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பவர்களுக்கு, நீரிழப்பு பிரச்சனையே வராது. மோர் நமது செரிமான மண்டலத்திற்கு மிகவும் அற்புதமான பானம். மோரில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் மற்றும் லாக்டிக் அமிலங்கள் உள்ளன. இவை செரிமானத்திற்கு உதவுவதோடு, நமது மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் மோர் குடலியக்கத்தைப் பராமரிக்க உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தினமும் மோர் குடித்து வந்தால், அப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். முக்கியமாக மோரை தினமும் குடித்து வருவதன் மூலம், வயிற்றில் ஏற்படும் தொற்றுகள் குடல் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கலாம்.

மோரைக் குடிப்பதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாகும். மேலும் கால்சியமானது இரத்த உறைதலுக்கும், தசைகளின் சுருக்கத்திற்கும், இதய துடிப்பிற்கும் அவசியமான சத்தாகும்.எண்ணெயில் பொரித்த மற்றும் காரமான உணவுகளை உட்கொண்டு அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒரு டம்ளர் மோரில் சிறிது மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மோரை தினமும் குடித்து வந்தால், அது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவுகளை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் இதயத்தின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மோரை தினமும் குடித்து வருவதன் மூலம், இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்.

மாசாலா மோர் தயாரிக்க தேவையான பொருட்கள்: கெட்டித் தயிர் – 1 கப், தண்ணீர் – 1 கப், கொத்தமல்லி – 2 டீஸ்பூன், மோர் மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு, தாளிப்பதற்கு: எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – 1/4 டீஸ்பூன், அரைப்பதற்கு: பச்சை மிளகாய் – 1/2, கறிவேப்பிலை – 3 இலை, இஞ்சி – 1/4 இன்ச். செய்முறை: கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை ஒரு பௌலில் போட்டு, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ள வேண்டும். கடைந்து வைத்துள்ள மோரில் அரைத்த விழுது, அத்துடன் மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி கலந்து விட்டால் சூடான மசாலா மோர் ரெடியாகிவிடும்.

Kokila

Next Post

கஞ்சாவை மோப்பம் பிடிக்கும் வேலை!... சம்பளம் இத்தனை லட்சமா!... ஜெர்மனி நிறுவனம் அறிவிப்பு!

Tue Feb 21 , 2023
மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சாவை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக ரூ.88 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜெர்மனியை சேர்ந்த ஃபார்மசி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஜெர்மனியின் கொலோன் என்ற பகுதியில் Cannamedical என்ற ஃபார்சி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்தநிலையில், மருத்துவ குணம்வாய்ந்த கஞ்சாவை ஜெர்மனியில் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை நுகர, உணர, மற்றும் புகைக்கக்கூடிய தரத்தை சரிப்பார்க்க தேர்ந்த […]

You May Like