தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மேலும் மனித உயிரிழப்புகளும், கால்நடை உயிரிழப்பும் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து, நெல்லையில் இன்று அதற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் தவறாமல் டோக்கனை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.