fbpx

மக்களே..!! மிக கனமழை எச்சரிக்கை..!! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அலர்ட்..!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் மாறுபாடு காரணமாகவும், தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நீலகிரி, கோவை, நாமக்கல் மாவட்டங்களில் மழை பதிவானது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கர்நாடகாவில் ஜூலை 5, 6, 7ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : BREAKING | நீட் தேர்வுக்கு என்னதான் தீர்வு..? யோசனை சொன்ன தவெக தலைவர் விஜய்..!!

English Summary

The India Meteorological Department has said that there is a possibility of moderate rain in Tamil Nadu, Puducherry and Karaikal for 7 days from today.

Chella

Next Post

FD வட்டி விகிதங்களை 3 கோடிக்கும் குறைவாக மாற்றம் செய்த Axis மற்றும் ICICI வங்கிகள்!!

Wed Jul 3 , 2024
ICICI Bank and Axis Bank have recently revised their Fixed Deposit (FD) interest rates, effective from July, 2024, for amounts less than ₹3 crore.

You May Like