Eye color: அமெரிக்காவில் கண்களின் நிறத்தை மாற்றிக்கொள்ளும் செயல்முறை மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது. அறுவை சிகிச்சையின்மூலம் நிறத்தை மாற்றிக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நமது அழகின் முக்கிய அங்கம் என்று சொன்னால் அது கண்கள்தான். விதவிதமான அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்தி கண்களை அழகாகக் காண்பித்துக்கொள்கிறோம். ஆனால், பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறோமா? கண்கள் மீது அக்கறையாக இருக்கிறோமா..? என்றால் கேள்வி குறிதான். கண்களால் உலகையே பைத்தியமாக்கும் பெண்களும் உண்டு. இருப்பினும், சிலர் கவர்ச்சியான மற்றும் அகலமான கண்கள் இல்லை என்பதால் அதற்காக ஒப்பனை மூலம் அவற்றை அழகாக்கிக்கொள்கின்றனர். அந்தவகையில், ஒவ்வொரு நாளும் புதிய ஒப்பனை நடைமுறைகள் வெளிவருகின்றன. இருப்பினும் இது எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது கண்களில் நிறத்தை மாற்றிக்கொள்ளும் செயல்முறை அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது.
அமெரிக்க மக்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்கள் கண்களின் நிறத்தை நிரந்தரமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட 57 வயதான கண் மருத்துவரான டாக்டர் பிரையன் பாக்ஸர் வாச்லர், கண்களில் நிறத்தை மாற்றும் அறுவைச் சிகிச்சையில் பிரபலமாகி வருகிறார். இன்ஸ்டா பிரபலமாகவும் விளங்கிவரும் இவருக்கு 3.4 மில்லியன் TikTok பின்தொடர்பவர்கள் மற்றும் 319,000 க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களுடன் உள்ளனர்.
டாக்டர் பிரையன் பாக்ஸர் கூறுகையில், “இது ஒரு ஒப்பனை அறுவை சிகிச்சை ஆனால் இது கண்களுக்கானது. இந்த செயல்முறை மிகவும் பாதுகாப்பானது மற்றும் முந்தைய லேசிக் இல்லாமல் ஆரோக்கியமான கண்களின் பார்வைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர் கூறினார். கண்களின் நிறத்தை மாற்றுவதற்கான இந்த அறுவை சிகிச்சை கெரடோபிக்மென்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை மூலம், நிறமிகள் கண்களின் கார்னியாவில் செலுத்தப்படுகின்றன, இதனால் அதன் நிறத்தை நிரந்தரமாக மாற்ற முடியும்.
இந்த செயல்முறைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இது இயற்கையான கண் நிறத்தை புதியதாக மாற்றுகிறது. இந்த நடைமுறையைச் செய்ய, நோயாளிகளுக்கு மயக்க மருந்துகள் வழங்கப்படுகின்றன, இதன் காரணமாக கண்களின் நிறத்தை மாற்றும் இந்த செயல்முறை எந்த வலியும் இல்லாமல் வெற்றிகரமாக செய்யப்படுகிறது. இருப்பினும், கண்களில் இந்த ஒப்பனை செயல்முறைக்கு, ஒரு கண்ணுக்கு 6000 டாலர்கள் அதாவது 12,000 டாலர்கள் (சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய்கள்) செலுத்த வேண்டும்.
Readmore: அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!. 6 பேர் பலி!. புறப்பட்ட 30 வினாடிகளில் பெரும் துயரம்!