fbpx

தமிழகத்தில் தனிநபர் வருமானம் 2023-24-ம் ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமானத்தை விட 1.71 மடங்கு அதிகம்…!

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-23-ல் நடப்பு விலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திட்டம், வளர்ச்சித்துறை செயலர் வெளியிட்ட செய்தி குறிப்பில் ; தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23-ம் ஆண்டுக்கான விரைவு மதிப்பீடு மற்றும் 2023-24-ம் ஆண்டுக்கான முன்மதிப்பீடு ஆகியவற்றை பொருளியல் மற்றும் புள்ளியல் துறை தயாரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த உற்பத்தி நிலையான விலையில் 2022-23-ம்ஆண்டில் ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24-ம் ஆண்டு நிலையான விலையில் ரூ.15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதம் நிலையான விலையில், 2022-23-ம் ஆண்டில் 8.13 சதவீதம், 2023-24-ம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் இருந்தது. அதேநேரம், நடப்பு விலையில் 2022-23-ம் ஆண்டில் 15.48 சதவீதம்,2023-24-ம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது. நாட்டின் மொத்தஉள்நாட்டு உற்பத்தியில், தமிழகத்தில் நடப்பு விலையில் 2022-23-ல்8.88 சதவீதம், 2023-24-ல் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 9.03 மற்றும் 9.04 சதவீதமாகவும் இருந்தது.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதி்ப்பில் 2022-23-ல் நடப்பு விலையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்ததாக 3-வது இடத்தில் உள்ளது.தமிழகத்தின் பணவீக்க வீதம் 2022-23-ல் 5.97 சதவீதம், 2023-24-ல் 5.37 சதவீதமாக இருந்தது. இதே காலகட்டத்தில், இந்தியப் பணவீக்க வீதம் 6.65 மற்றும் 5.38 சதவீதமாகவும் இருந்தன. மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி, நிலையான விலையில் 2012 முதல் 21 வரை 5.80 சதவீதமாகவும், கடந்த 2021-24 வரை 3 ஆண்டுகளில் முறையே 7.89, 8.13, 8.23 சதவீதமாகவும் இருந்தது.

இதனால், 2012-21 வரையான முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து, 2021-24 என மூன்றாண்டுகளில் சராசரி வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதமாக உள்ளது. தமிழகத்தின் தனிநபர் வருமானம் நிலையான விலையில் 2022-23, 2023-24 ஆகிய இரண்டுஆண்டுகளில் தமிழக தனிநபர் வருமானம் தேசிய தனிநபர் வருமானத்தைவிட 1.68 மடங்கு அதிகமாக உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல், நடப்பு விலையில் தமிழகத்தின் தனிநபர் வருமானம் 2023-24-ம் ஆண்டில் தேசிய அளவில் தனிநபர் வருமானத்தைவிட 1.71 மடங்கு அதிகமாக இருந்தது. மேலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு, நிலையான விலையில், முறையே 9.29 சதவீதம் மற்றும் 6.37 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையானது 45.47 சதவீதமும், 45.90 சதவீதமும் பங்களித்தது. 2023-24-ம் ஆண்டில் பணித்துறை நிலையான விலையில் 9.25 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

போக்குவரத்து, சேமிப்பு கிடங்குமற்றும் தகவல் தொடர்பு துறைகளில் 8.76 சதவீதம், பிறவகை போக்குவரத்துத் துறையில் 7.46 சதவீதம்,நிதி தொடர்பான பணிகளில் 9.29 சதவீதம், கட்டிடம், மனை துறையில்10.08 சதவீதம், பிறவகைப் பணிகளில் 9.96 சதவீதம் என வளர்ச்சி காணப்பட்டது. இதன்மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு பணித்துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Per capita income in Tamil Nadu is 1.71 times higher than national per capita income by 2023-24.

Vignesh

Next Post

மக்கள் மருந்தகத்தில் அக்டோபர் மாதம் ரூ.1,000 கோடிக்கு விற்பனை...!

Tue Oct 22 , 2024
Rs 1,000 crore sale in People's Pharmacy in October

You May Like