fbpx

இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு…; ஊர்காவல் படையில் சேர 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

சென்னை ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை பெருநகர காவலில் நான்கு மண்டலத்திற்கு உண்டான ஊர்காவல்படை துணை மண்டல தளபதிக்கான (Deputy Area Commanders) பணியில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு எவ்வித ஊக்கத் தொகையும் வழங்கப்படமாட்டாது. இப்பணியில் சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் சேவை புரிவோருக்கு தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் குடியரசுத்தலைவர் பதக்கம் ஆகியவை தகுதி அடிப்படையின் கீழ் வழங்கப்படும்.

கீழ்காணும் தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த மற்றும் சேவை மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். குற்றப்பின்னனி இல்லாத நன்னடத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டும். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். குடும்ப அட்டை (Ration Card) வைத்திருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் விண்ணப்ப கடிதத்துடன், Curriculum Vitae படிவத்தை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு 31.10.2024 மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பலாம்.

முகவரி: சென்னை பெருநகர ஊர்காவல்படை அலுவலகம், சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம், சைதாப்பேட்டை, சென்னை-15.

English Summary

Persons above 18 years of age can apply to join the Home Guard

Vignesh

Next Post

புற்றுநோயை தடுக்கிறதா பீர்?. ஜெர்மன் ஆய்வில் புதிய தகவல்!

Tue Oct 22 , 2024
In Beer Yeast, UVA Scientists Find Potential Path to Starving Cancer

You May Like