வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe பெங்களூரில் Pincode எண்ணம் புதிய வர்த்தக செயலியை அறிமுகம் செய்துள்ளது.
வால்மார்ட்-ஆதரவு பெற்ற PhonePe ஆனது, அரசாங்கத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான தளத்தில் கட்டமைக்கப்பட்ட அதன் செயலியான Pincode என்னும் புதிய அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது இது பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது..
இது குறித்து PhonePe நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் நிகம் கூறுகையில், Pincode செயலி முதலில் பெங்களூரில் கிடைக்கும் என்றும், இந்த செயலி மூலம் ஒரு நாளைக்கு சுமார் 10,000 பரிவர்த்தனைகளை எட்டிய பிறகு மற்ற நகரங்களுக்கும் விரிவடையும் என்றனர். PhonePe ஒரு புதிய ஷாப்பிங் செயலியை அறிமுகப்படுத்துகிறது, இது கடைகளை தொடர்பு கொள்ள வைக்கிறது என தெரிவித்துள்ளார்.