fbpx

அதிரடி…! அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவது கட்டாயம்…!

அரசு ஊழியர்கள் அனைவரும் பணியின் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு சார்பு செயலாளர் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்; அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் தலைவர்களுக்கும் அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது. மேலும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அடையாள அட்டை அணிவது தொடர்பான அறிவுறுத்தங்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளன.

அனைத்துத் துறைத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலகங்களுக்கு அரசு ஆணைகள் அறிவுறுத்தங்களின்படி , பணியாளர்கள் , புகைப்பட அடையாள அட்டையைத் தவறாமல் அணியுமாறு அறிவுறுத்தியும் அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகளை அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இவ்வரசாணை அறிவுரைகள் பின்பற்றப்படாத நேர்வுகளில் , பொதுமக்கள் தகுந்த நடவடிக்கை மற்றும் தீர்வுக்காக அலுவலகத் தலைவர் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகம் துறைத் தலைவர் ஆகியோரை அணுகி தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Photo ID card is mandatory for all government employees

Vignesh

Next Post

4 நாட்கள் தீபாவளி விடுமுறை? முதலமைச்சருக்கு பறந்த கடிதம்.. கருணை காட்டுமா தமிழக அரசு?

Sun Oct 13 , 2024
Government employees request the Chief Minister to issue an order to grant a holiday the day after Diwali

You May Like