fbpx

நயனுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்தது தப்பா? வாடகைத்தாய் விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பம்…

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த விக்கி – நயன் ஜோடி, இவர்களுடன் ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கொண்டதால் இந்த சர்ச்சையில் சிக்கியதாக பெண் ஒருவர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

சினிமா பிரபலங்களான விக்கி- நயன் ஜோடி திருமணம் ஆன நாள் முதலே சர்ச்சையில் சிக்கிக் கொண்டு வருகின்றனர். திருப்பதி கோயில் வளாகத்தில் செப்பல் அணிந்து சென்றதாக கூறி சர்ச்சையில் சிக்கினர். அதைத் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் பெண் ஒருவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் தான் சர்ச்சையில் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

வாடகைத்தாய் விவகாரத்தில் இவர் தான் நயன்தாரா குழந்தைகளின் வாடகைத் தாய் என ஒரு புகைப்படம் வலம் வந்தது. இதையடுத்து அவர் வாழ்க்கையில் ஒரு புயலே ஏற்பட்டுவிட்டதால். விக்னேஷ் சிவனின் அம்மா மீனா குமாரிக்கு நெருங்கிய தோழியான விஷ்ணுபிரியா சிறு வயதில் இருந்து நல்ல நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் நயன் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் வெள்ளிக்கிழமைகளில் அந்த பெண்மணி வழக்கமாக காளிகாம்பால் கோவிலுக்கு செல்வாராம். அப்போது நயனும் விக்கியும் வரும் செய்தியை விக்கியின் அம்மா விஷ்ணுபிரியாவுக்கு தெரிவித்துள்ளார். இதனால் அவர் கோவிலுக்கு சென்றபோது கோவில் வாசலில் நின்று இருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அந்த புகைப்படம் தான் வாடகைத்தாய் என ஒரு பூகம்பத்தை கிளப்பி பத்திரிகையாளர்கள் செய்தியை உலா விட்டுள்ளனர். இதனால் அவரது வீட்டில் பெரிய சிக்கலே ஏற்பட்டுவிட்டதாம். பின்னர் இது பற்றி அவர் ஒரு தனியார் சேனலுக்கு அப்படி எல்லாம் இல்லை. இதுதான் நடந்த உண்மை என தெரிவித்துள்ளார்.

Next Post

என்.ஐ.ஏ. என்னிடம் விசாரணை நடத்தினால் …. அண்ணாமலை விடுக்கும் எச்சரிக்கை !!

Sat Oct 29 , 2022
என்.ஐ.ஏ. என்னிடம் விசாரணை நடத்தினால் பல உயர் அதிகாரிகள் பதவி பறிபோகும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும் , காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது பற்றி செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசினார். அப்போது அண்ணாமலை , காவல்துறைக்கு முன்னதாகவே அனைத்தையும் வெளியிடுகின்றார். அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டார். அதே நேரத்தில் கடலூரில் அண்ணாமலை போராட்டத்தில் […]

You May Like