ராஜபாளையத்தை அடுத்த சேத்துார் மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் 55 வயதான முருகேசன். இவர் போட்டோகிராபராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சுப முகூர்த்த நாள் என்பதால் அவர் ராஜபாளையத்தில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற நிகழ்ச்சிக்கு 8 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். அப்போது முருகேசனுக்கு சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் முருகேசன் சிறுமியை நோட்டமிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து, முருகேசன் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத அறை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, பதறிப்போய் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் அவர் தனது பெற்றோர்களிடம் சென்று நடந்த சம்பவத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், முருகேசனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.