தமிழக திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர்கள் அஜித்தும், விஜயும்.தமிழக திரைத்துறையில் மிக அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார் தான் என்று சொல்லப்படும் சூழ்நிலையில், அவர் அரசியலுக்கு வருவாரா? என்று இதுவரையில் யாரும் கேட்டதில்லை. அப்படியே கேட்டாலும் அந்தக் கேள்வியை ஒட்டுமொத்தமாக தவிர்த்து விடுவார் அஜித்குமார்.
இந்த நிலையில் தான் நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். இந்த சந்திப்பில் ரசிகர்களுடன் விஜய் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.அதில் மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சூழ்நிலையில்தான் அந்த மாற்றுத்திறனாளி ரசிகர் பிரபாகரன் சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் விஜயை சந்திக்க சென்றபோது மாடிப்படியில் என்னால் ஏறிச் செல்ல முடியவில்லை. அதன் காரணமாக, என்னை தூக்கிச் சென்றார்கள். இதனை கவனித்த விஜய் உடனடியாக என்னை ஓடிவந்து தூக்கிக் கொண்டார் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் என்னிடம் தங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா? உதவி வேண்டுமென்றால் செய்கிறேன் என்று தெரிவித்தார். அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் அவர் என்னை தூக்கியதால் நான் பிரபலமாகி விட்டேன். அஜித் ரசிகர்கள் கூட என்னை வந்து சந்தித்து பேசினார்கள் என்று விஜயின் ரசிகர் பிரபாகரன் தெரிவித்திருக்கிறார்.