தெலங்கானா மாநில பகுதியில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானம் ஒன்றை ஓட்டலாக மாற்றி மக்களை ஈர்க்க முடிவு செய்தார்.
இதனை தொடர்ந்து கொச்சியில் ஒரு பழைய விமானம் வாங்கி அதனை ராட்சத லாரியில் வைத்து ஹைதரபாத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
லாரியின் வழியாக கொண்டு வரப்பட்ட நிலையில் விமானம் மேதரமெட்லா பகுதியில் உள்ள ஒரு மேம்பாலத்தின் கீழே அடியில் மாட்டிக்கொண்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியை, அப்பகுதி மக்கள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகின்றது. அத்துடன் மேம்பாலத்தில் இருந்து அந்த விமானம் சேதமடையாமல் வெளியே கொண்டு வர முயற்சி செய்து வேறு வழியில் தற்போது ஹைதராபாத் பகுதியை நோக்கி பயணித்தை தொடர்ந்துள்ளது.