fbpx

’என்னை மன்னித்து விடுங்கள்’..!! ரசிகரிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் ஜெயம் ரவி..!!

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சைரன்”. இந்த திரைப்படம் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதற்கிடையே, படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவியிடம் அவரது ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த விழாவில் கலந்து கொண்ட ரசிகர் ஒருவர் ஜெயம் ரவியை நெருங்க முடியவில்லை. இதனால் வருத்தம் அடைந்த அவர், எக்ஸ் தளத்தில் “நான் உண்மையிலேயே உங்களை வெறுக்கிறேன் ஜெயம் ரவி அண்ணா. 

நெருக்கமான ரசிகர்கள் மட்டுமே உங்களுக்கு தேவைப்பட்டால், எதற்காக அனைத்து ரசிகர்களையும் அழைத்தீர்கள். இது எனக்கு மிகவும் மோசமான நாள். இது போல் நடந்ததை இனி உங்களிடம் பார்க்கக் கூடாது” என குறிப்பிட்டிருந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயம் ரவி, இதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ’மன்னித்துவிடுங்கள் சகோதரரே. நான் தனிப்பட்ட முறையில் 300க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன். எப்படி உங்களை தவறவிட்டேன் என தெரியவில்லை. சென்னைக்கு வாருங்கள் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன். என்னை வெறுக்காதீர்கள், அன்பை மட்டுமே பரப்புங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

வடசென்னையில் அதிகளவு குழந்தை கடத்தலா..? பீதியில் பெற்றோர்கள்..!! சென்னை காவல்துறை பரபரப்பு அறிக்கை..!!

Sat Feb 17 , 2024
குழந்தை கடத்தல் சம்பவங்கள் வடசென்னை பகுதியில் அதிகளவு நடப்பதாக பரவும் காணொளிகள் சோசியல் மீடியாவில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இவை பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை பெருநகர காவல்துறை தரப்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க […]

You May Like