பல்லாவரம் பகுதியில் எட்டியப்பன் தெருவில் டில்லிபாபு (56) தனது மனைவி மேனகா (50), 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். டில்லிபாபு சென்னை பகுதியில் முத்தியால்பேட்டை அரசுப் பள்ளியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மகள், அதே பள்ளியில் பிளஸ் 2 பயின்று வருகிறார். தினமும் பள்ளிக்கு பல்லாவரத்தில் இருந்து தந்தையுடன் ரயிலில் சென்று வந்திருக்கிறார்.
இந்த நிலையில், பள்ளியில் தேர்வு நடந்து வருவதனையொட்டி, மாணவி மட்டும் தனியாக பிற்பகல் நேரத்தில் பள்ளியிலிருந்து வீட்டுக்கு சென்று வந்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து சென்ற 18-ம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. மேலும் பள்ளிக்கும் செல்லவில்லை என்று அறியப்படுகிறது. இச்சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவிகளும் உறவினர்களும் எல்லா பக்கமும் தேடி வந்துள்ளனர். இருப்பினும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மாணவி குறிப்பிட்ட ஒரு யூடியூப் சேனலை மட்டும் தொடர்ச்சியாக பார்த்து வந்துள்ளார். மேலும் அந்த யூடியூப் நடத்தும் நபரிடம் அடிக்கடி செல்போனில் மாணவி பேசியும் வந்துள்ளார். மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, அவர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யூடியூபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனை குறித்து எவ்வித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அத்துடன் மாணவி கடைசியாக பயன்படுத்திய செல்போன் நம்பரை பயன்படுத்தி ,கடைசியாக பேசிய நபரை ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையில் காணாமல் போன மகளை விரைவில் கண்டுபிடித்து தருமாறு முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளனர் பெற்றோர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.