fbpx

#திருச்சி: பொது தேர்வு பயத்தால் எலி பேஸ்ட் சாப்பிட்ட +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்!

‌திருச்சி மாவட்டம் முசிறியை சார்ந்த பிளஸ் 2 மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சார்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள் வர்ஷா வயது 20. கடந்த 2020 ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்த இவர் பாதியிலேயே தனது படிப்பை நிறுத்திவிட்டார். அதன் பிறகு 202-23 ஆம் ஆண்டு தனித்தேர்வுக்காக வீட்டிலிருந்து படித்து பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுத முடிவு செய்தார். தேர்வுகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் தான் பரிட்சையில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயம் மட்டும் வர்ஷாவிற்கு இருந்திருக்கிறது இதனால் மிகவும் குழப்பமான மனநிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த நான்காம் தேதி வீட்டிலிருந்த எலி பேஸ்ட் விஷத்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் வர்ஷா. எலி பேஸ்ட் சாப்பிட்டு மயக்கம் அடைந்த நிலையில் இருந்த வர்ஷாவை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வர்ஷா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை பிணவறைக்கு மாற்றப்பட்டது.

Rupa

Next Post

பிளாஸ்டிக் தடை.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த புதிய தகவல்..

Sat Apr 8 , 2023
பிளாஸ்டிக் தடை உத்தரவை முழு அளவில் அமல்படுத்த இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கான உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. அதில், பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட்கள், எண்ணெய், […]
இனியும் சும்மா இருக்க மாட்டோம்..! கொந்தளித்த தமிழக அரசு..! கடைகள் மீது பாயும் அதிரடி நடவடிக்கை..!

You May Like