fbpx

பிரதமர் அதிரடி: “அயோத்தியில் இருந்து திரும்பிய பின் அறிவித்த சூர்யோதயா யோஜனா திட்டம்..” இதன் சிறப்பம்சங்கள் என்ன.?

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் தலைமை ஏற்று ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் மோடி கும்பாபிஷேக நிகழ்வுகளுக்குப் பிறகு தலைநகர் திரும்பிய அவர் பிரதான் மந்திரி சூரிய யோஜனா திட்டத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு கோடி ஏழைகள் பயன் பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் இருக்கக்கூடிய அனைத்து பக்தர்களுக்கும் ஒளியின் சக்தியை வழங்கக்கூடிய ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இந்த சிறப்பான நாளில் நாட்டில் இருக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்களின் வாழ்வை வலுப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி ஏழை மக்களின் வாழ்வில் ஒளி ஏற்படுத்தும் பொருட்டு இந்தத் திட்டத்தை அறிவிப்பதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

இதன்படி இந்தியாவில் இருக்கும் ஒரு கோடி மக்களின் வீடுகளில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் மேற்கூரை திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அயோத்தியில் இருந்து டெல்லி திரும்பிய பிறகு அறிவிக்கும் முதல் திட்டம் இதுவாகும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு பிரதான் மந்திரி சூரியோதயா யோஜனா திட்டம் என பெயரிட்டு இருப்பதாகவும் பிரதமர் அறிவித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு கோடி ஏழை மக்களின் வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் நிறுவப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தரவருக்கு மக்களின் மின்சார செலவுகள் குறைவதோடு சக்தி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வளரும் எனவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

Next Post

நாளை முதல் பொது மக்களுக்காக திறக்கப்படும் ராமர் கோயில்..! ஆரத்தி, தரிசன நேரம் மற்றும் பிற விவரங்கள்..!

Mon Jan 22 , 2024
அயோத்தி நகரில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று முடிந்திருக்கிறது. இந்திய மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு சடங்குகளுடன் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் மோடி. நூற்றாண்டு சிறப்புமிக்க இந்த நிகழ்வில் 7,000-திற்கும் அதிகமான சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் […]

You May Like