fbpx

“சூப்பர் நியூஸ்” வாத்ஸல்யா திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.4,000 பெரும் திட்டம்…! யாரெல்லாம் இதன் மூலம் பயன்படுத்தலாம்…?

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ள அமைச்சர் ஸ்மிருதி இரானி, கொரோனா பெருந்தொற்று பாதிப்பால், பெற்றோர், தத்தெடுத்த பெற்றோர் அல்லது சட்டப்பூர்வமான பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கப்பட்டு வருவதாக இதுபோன்ற குழந்தைகள் தன்னிறைவு பெறும் வகையில், அவர்கள் 23 வயதை எட்டும் வரை சுகாதார காப்பீடு மற்றும் கல்வி உதவிகள் வாயிலாக உதவியளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.  இத்திட்டத்தின்கீழ், சேர்க்கப்படும் குழந்தைகள் 18 வயதை அடையும் போது, அவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பெறும் வகையில் நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டு, பணம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த 10 லட்சம் ரூபாயை அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் 18 வயது முதல் 23 வயது வரை மாதாந்திர உதவித் தொகையை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.  உறவினர்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்கு வாத்ஸல்யா திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.4,000 வழங்கப்படுவதுடன், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் இந்தக் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவதுடன், ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கு ரூ. 20,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர, பிரதமரின் ஜன் ஆரோக்கியா காப்பீடு திட்டத்தின்கீழ், 23 வயது வரை சுகாதார காப்பீட்டு வசதி வழங்கப்படுவதாகவும் கூறினார்.

Also Read: தமிழக அரசு சார்பில் 9 முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் உதவித்தொகை…! எப்படி அப்பளை செய்வது…? முழு விவரம் இதோ…

Vignesh

Next Post

வாகன ஓட்டிகளே... சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியாக சென்னை ஐஐடி, தமிழக அரசு முன்னெடுக்கும் புதிய முயற்சி...!

Sat Jul 30 , 2022
ஐஐடி மெட்ராஸ்-ன் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், ‘வடிவமைப்பு சிந்தனை’ அணுகுமுறை ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த முன்முயற்சியை சாலைப் பாதுகாப்பில் தொடர்புடைய தமிழ்நாடு அரசின் துறைகள் குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அமல்படுத்த உள்ளது. சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு […]
அதிர்ச்சி..! தமிழக போக்குவரத்து துறையில் சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு..!

You May Like