fbpx

மத்திய பிரதேசத்தில் பயங்கர பேருந்து விபத்து…! இறந்தவளுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு…!

மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் பேருந்து விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத் தொகையையும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:“மத்திய பிரதேச மாநிலம் சித்தியில் ஏற்பட்ட பேருந்து விபத்து வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில், என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத்திய பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.

மத்திய பிரதேச விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

இது தெரியாம போச்சே...! 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரயில் டிக்கெட்டுகளை எடுக்க தேவை இல்லையாம்...!

Sun Feb 26 , 2023
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்ற அந்த செய்தி முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக […]

You May Like