fbpx

பெரும் சோகம்…! புகழ்பெற்ற விஞ்ஞானி காலமானார்…! பிரதமர் மோடி இரங்கல்…!

இந்திபோர் தூரி உடல்நிலை குறைவு காரணமாக கவுகாத்தியில் காலமானார்.

அசாமின் புகழ்பெற்ற விஞ்ஞானியும், அறிஞருமான இந்திபோர் தூரி உடல்நிலை குறைவு காரணமாக கவுகாத்தியில் காலமானார். அவருக்கு வயது 77.கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ஜுக்தி பிகாஷ், ஜுக்திர் போஹோரோட் சமாஜ், மற்றும் ஜோதி-பிஷ்ணு என்ற மூன்று புத்தகங்களையும் ஆசிரியர் பிரசென்ஜித் சவுத்ரியுடன் இணைந்து தொகுத்துள்ளார்.

இந்திபோர் தூரியின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில்; இந்திபோர் தூரியின் மறைவை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இலக்கியம், கலாச்சாரம் மற்றும் கல்வி உலகில் அவர் போற்றுதலுக்குரிய பங்களிப்பை வழங்கினார். அன்னாரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வெயிலுக்கு மத்தியில் மிதமான மழை பெய்யக்கூடும்...! சென்னை வானிலை மையம் தகவல்...!

Thu Mar 9 , 2023
தென் தமிழக மாவட்டங்களில் 11-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like