fbpx

விவசாயிகளே புதிய அறிவிப்பு..! அரசு தரும் ரூ.2,000 நீங்கள் பெற வேண்டுமா…? வரும் 31-ம் தேதி தான் கடைசி நாள் என அறிவிப்பு…!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, மத்திய அரசு இந்த மாத இறுதியில் விடுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். பிரதமர் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 12-வது தவணைக்கான நிதியை பெற eKYC-யை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான காலத்திற்கு விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது, இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்திலும்.. மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையிலான காலத்திற்குள் வரவு வைக்கப்படும். இதற்கு 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் உரிமை கொண்ட சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயன்பெற நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Vignesh

Next Post

மக்களே உஷார்.. இன்று இந்த 10 மாவட்டத்தில் வெளுக்க போகும் கனமழை...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Tue Aug 23 , 2022
தமிழகத்தில் வரும் 26ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, […]

You May Like