fbpx

நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மதன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்…!

மூத்த அரசியல் தலைவரும், நீலகிரி தொகுதி முன்னாள் பாஜக எம்.பியுமான மாஸ்டர் மதன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் மாதன், நீலகிரி தொகுதி எம்.பி.,யாக கடந்த, 1998, 1999 ஆண்டுகளில் பதவி வகித்தவர். தற்போது, 93 வயதான இவர் பிரஸ் காலனி, பாலாஜி கார்டனில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். உடல் நலம் குன்றிய நிலையில், சிகிச்சை பெற்று வந்த மாஸ்டர் மதன் இன்று காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில்; முன்னாள் எம்.பி., மாஸ்டர் மதன் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. சமுதாயத்திற்கு சேவை செய்யவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பணியாற்றவும் அவர் செய்த முயற்சிகளுக்காக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவதில் பாராட்டத்தக்க பங்கு வகித்தார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

English Summary

PM Modi condoles death of Master Madan.

Vignesh

Next Post

'அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லாததால் நடிகையை படத்தில் இருந்து தூக்கிய நகுல்’..!! உதவி இயக்குனர் பகீர் தகவல்..!!

Sat Jul 27 , 2024
Chandru Bagheer also alleged that Nakul made Brigida leave the film because she was not open to adjustment.

You May Like