கேரள மாநிலத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்தார் பிரதமர் மோடி.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு தனி விமானம் மூலம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் முத்துசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், பாடி ஏடிஜிபி அருண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ஆகியோர் மலர் கோத்து கொடுத்து வரவேற்றனர். விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் பல்லடம் மாதப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழாவில் சிறப்புரையாற்றும் பிரதமர் மோடி, மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்து அங்கு இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் விமானப்படை தளம் முன்பு பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகை ஒட்டி திருச்சி சாலையில் உள்ள விமான படை தளத்தை சுற்றி இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
மேலும், 500-க்கும் மேற்பட்ட போலீசார் சூலூர் விமானப்படை தளம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் வருகை ஒட்டி திருச்சி சாலையில் உள்ள விமான படை தளத்தை சுற்றி இருக்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
English Summary : Prime Minister Modi arrived in Tamil Nadu..!!
Read More : Lok Sabha | காங்கிரஸில் இருந்து அதிரடி விலகல்..!! பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி..!!