fbpx

சிரித்த முகத்துடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த பிரதமர் மோடி..!! அந்த பெண் யார் தெரியுமா..?

இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி உடன் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது.

ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டார்.

மேலும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்த மெலோனி, ‘மெலோடி டீமிடம் இருந்து ஹலோ’ ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். மெலோனி – மோடி செல்ஃபி வீடியோ வைரலாவது இது முதன்முறையல்ல. முன்னதாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, ‘செல்பி’ பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் புகைப்படத்தை தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட மெலோனி, ‘பருவநிலை மாறுபாடு மாநாட்டில் சிறந்த நண்பருடன்’ எனக் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், ‘மெலோடி’ என்ற வார்த்தையையும் அவர் பயன்படுத்தினார். அந்த செல்ஃபி வைரலானது, #மெலோடியும் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Read More : 8 நக்சல்கள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை..!! பாதுகாப்புப் படை வீரர் வீர மரணம்..!! சத்தீஸ்கரில் பரபரப்பு..!!

English Summary

A selfie video of Prime Minister Narendra Modi with Italian Prime Minister Giorgia Meloni is going viral.

Chella

Next Post

சவால் விட்ட பாஜக தலைவர் அண்ணாமலை..!! எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் #GoBackStalin..!!

Sat Jun 15 , 2024
A hashtag #GoBackStalin has been created and trending on the X site.

You May Like