தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.நாட்டின் வளமான கலை மற்றும் கைவினைக் கலை பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் கைவினை கலைஞர்கள் மற்றும் ஆதரவை வழங்குவதில் பிரதமர் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்.
இந்த தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் அரசு தேசிய கைத்தறி தினத்தைக் கொண்டாடத் தொடங்கியது. இந்த தினத்தின் முதல் கொண்டாட்டம் ஆகஸ்ட் 7, 2015 அன்று நடைபெற்றது. 1905-ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், உள்நாட்டு தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் இந்த தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.