fbpx

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம் பயணம்…

மேற்கு வங்க மாநிலத்துக்கு இன்று பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை உட்பட ரூ.7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக பிரதமரின் செயல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஹவுரா மற்றும் நியூ ஜகல்பூரி பகுதிகளை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மற்றும், கொல்கத்தா மெட்ரோவின் ஜோகா-தராட்டலா வழித்தடத்தின் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும், இந்திய ரயில்வே துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 புதிய திட்டப்பணிகளை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் உட்பட மொத்தம் ரூ.7,800 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வரும் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்...! சென்னை வானிலை மையம் தகவல்...!

Fri Dec 30 , 2022
நாளை முதல் வரும் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட உள் தமிழக மாவட்டங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like