பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அவர் புனித கோதாவரி நதிக்கரைக்குச் சென்று ஆசி பெற்றார். இந்த நிகழ்வின் போது கங்கா கோதாவரி பஞ்சகோடி புரோகித சங்கத்தின் பார்வையாளர்கள் பதிவேட்டில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என எழுதி கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடி அங்கு அமைந்துள்ள புனிதமான கோதாவரி நதிக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டார். மேலும் அந்த நதிக்கரையில் அமைந்திருக்கும் காலா ராம் கோவிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். நாசிக் நகருக்கு வருகை புரிந்து கோதாவரி நதியில் கங்கா பூஜை செய்த முதல் இந்திய பிரதமர் மோடி தான் என பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார் புரோகிதர் சங்கத்தின் துணைத் தலைவரான சதீஷ் சுக்லா.
PM Narendra Modi wrote "Jai Shri Ram" in the visitors' book at Ganga Godavari Panchkoti Purohit Sangh in Nashik pic.twitter.com/BkNQbsZSEo
— MS Engima (@newsseeker2412) January 12, 2024
மேலும் இந்த புனித மிக்க நதிக்கரையில் கங்கா பூஜை செய்த பிரதமர் மோடி “பாரதத் தாயின் மகனாகிய நான் இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவேன்” என சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதாகவும் தெரிவித்திருக்கிறார் சுக்லா . கோதாவரி நதிக்கரைக்கு வந்த பிரதமர் மோடி அங்கிருந்த பார்வையாளர்களின் வருகை பதிவேட்டில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற வாசகத்தை எழுதி கையெழுத்துட்டு இருக்கிறார் . இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் ட்ரெண்டிங்காகி வருகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தான் செல்லும் இடமெல்லாம் ஸ்ரீ ராமர் மீது கொண்ட பக்தியை பிரதமர் மோடி வெளிப்படுத்தி வருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.