fbpx

Modi: அண்ணாமலைக்கு பாராட்டு…! பிரதமர் மோடி எழுதிய கடிதம்…!

முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். எனது நேரத்தின் ஒவ்வொரு தருணமும் நாட்டு மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மக்களின் ஆசியுடன் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தை அடைவீர்கள்.

2047 க்குள் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா உருவாக வேண்டும் எனவும் பிரதமர் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ராம நவமியின் புனிதமான நாளில் உங்களுக்கு கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். உங்கள் உடல்நிலை நன்றாக இருப்பதாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் கடிதத்தில் வேட்பாளர்க தனிப்பட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.

அதே போல கவுரமிக்க பணியை உதறிவிட்டு மக்களுக்காக நேரடியாக பணியாற்ற வந்ததாக அண்ணாமலைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மதிப்புமிக்க அரசுப் பணியை விட்டுவிட்டு, நேரடியாக பொதுச் சேவையில் ஈடுபடும் வகையில், மாற்றத்திற்காக அரசியலுக்கு வருவதற்கான உங்கள் முடிவிற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன். தமிழகத்தில் பா.ஜ.க.வின் முன்னிலையை அதிகரிப்பதில் நீங்கள் மிகவும் முக்கியமானவர் என குறிப்பிட்டுள்ளார்.

Vignesh

Next Post

உங்கள் ஒரேயொரு ஓட்டு எப்படி மாற்றத்தை ஏற்படுத்தும்?… தேர்தலில் ஏன் வாக்களிக்க வேண்டும்?

Thu Apr 18 , 2024
One Vote: நம்முடைய ஒரு ஓட்டு மட்டும் மாற்றம் ஏற்படுத்திவிடுமா என நினைக்காதீர்கள். நமது ஒற்றுமையே நமது பன்முகத்தன்மை, மற்றும் நமது எதிர்காலத்துக்காக வாக்களிப்பது அவசியம். இது தேர்தல் காலம்! தேர்தல் கால உற்சாகங்கள், விவாதங்கள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நம்மில் பலர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லாமல் காரணம் சொல்லிக் கொண்டிருப்போம். ஒவ்வொரு வாக்கும் ஜனநாயகத்தின் பெரும் கட்டமைப்பில் ஒரு கட்டுமானப் பொருள். உங்கள் வாக்கு ஏன் ஒரு […]

You May Like