pm modi about sengol: பிரதமர் மோடி தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். இதில் “செங்கோல்” குறித்த கேள்விக்கு, பதிலத்துள்ள மோடி, “நம் நாட்டின் சுதந்தரத்தின் முதல் நொடி, முதல் கணம் இந்த செங்கோலோடு தொடர்புடையது. இதன் தொடர்பு குறித்து ஆதீனங்கள் தெரிந்திருந்தனர். அவர்கள் தான் பண்டீதர் நேரு கிட்ட இந்த செங்கோலை கொடுத்தனர். ஒரு அரசியல் மாற்றத்தின் அடையாளத்தை உணர்த்தும் விதமாக கொடுக்கப்பட்ட இந்த செங்கோல் மீது பெரிய மரியாதை கொடுக்கப்படவில்லை.
இந்த செங்கோலை அலகாபாத் அருங்காட்சியில் வைத்திருந்தார்கள். அதற்கு கீழே நேருவின் வாக்கிங் ஸ்டிக் என்று எழுதி வெச்சிட்டாங்க. எவ்வளவு புனிதமான விஷயத்தை இப்படி வெச்சிருக்காங்க. செங்கோல் பற்றி எனது கவனத்திற்கு வந்த பிறகு நான் அதை அருங்காட்சியில் இருந்து எடுத்து வந்துவிட்டேன், பிறகு இது குறித்து ஆதினத்திடம் கேட்டறிந்தேன். பல ஆய்வுகளுக்கு பிறகு தான், பாரத சுதந்திரத்தின் முதல் கணத்தின் அடையாள சின்னமான செங்கோலை, புதிய பாராளுமன்றம் உருவாகும்போது அதில் நிறுவ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
மேலும் இதை புதிய பாராளுமன்றத்தில் ஒரு ஓரத்தில் வைக்க கூடாது என்று, ஒரு புதிய சபை மரபையே உருவாக்கினோம். அதாவது குடியரசுத் தலைவர் பாராளுமன்றத்திற்கு வரும் போது அந்த செங்கோல் அவருக்கு முன்னாடி வழி நடத்திட்டு போகும். அதன் பிறகு செங்கோலை நிலை நிறுத்திய பிறகு தான் குடியரசுத் தலைவரின் உரையே தொடங்கும். இப்படி ஒரு புதிய சபை மரபையே செங்கோலுக்காக உருவாக்கினோம்.
செங்கோல் என்பது நமது நாட்டின் அரசியல் செயல்பாட்டோடு தொடர்புடைய, தமிழகத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றக் கூடிய, பெருமைக்குரிய விஷயம் என்பது அனைவரின் மனதிலும் வர வேண்டும். இதில் பெரிய துரதிர்ஷ்டம் என்னவென்றால், தமிழ்நாட்டின் தலைவர்கள் இந்த நிகழச்சியை புறக்கணித்தார்கள். தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை பற்றி தமிழ் தலைவர்களுக்கே பெருமிதம் இல்லையென்றால், நாம என சொல்றது” என்று கூறியிருந்தார்.
Also Read: Modi: தேர்தல் பத்திர விவகாரம்!… பிரதமர் மோடியின் விளக்கமும்!… சரமாரி கேள்வியும்!