fbpx

திருமணமான ஒரே மாதத்தில் காதல் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்…….! கதறும் பெண் வீட்டார்…..!

கோவை சிறுவாணி சாலையில் உள்ள மத்தவராயபுரம் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சஞ்சய் இவர் தனுடன் கல்லூரியில் படித்து வந்த செல்வபுரத்தை சேர்ந்த ரமணி என்ற இளம் பெண்ணை கடந்த மாதம் 8ம் தேதி காதல் திருமணம் செய்தார். இவர்களின் திருமணத்தை ரமணியின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே சஞ்சயின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டதால் திருமண தம்பதிகள் சஞ்சயின் பெற்றோருடன் சஞ்சயின் வீட்டில் வசித்து வந்தன.

இந்த நிலையில் தான் கடந்த 29ஆம் தேதி ரமணி மூச்சுத்திணறலுடன் படுக்கை அறையில் கிடந்ததாக தெரிவித்து அவருடைய கணவர் புலுவாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே ரமணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவருடைய உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கு நடுவே ரமணியின் உடலில் காயங்கள் உள்ளதாகவும் அவரை அடித்து கொலை செய்துவிட்டனர். எனவும் உறவினர்கள் ரமணியின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் குதித்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர். அதோடு மர்மமான முறையில் உயிரிழந்த ரமணியின் கை மற்றும் கழுத்து பகுதிகளில் காயங்கள் இருப்பதாக சொல்லப்பட்டது.

இது குறித்து ஆலந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக கோவை தெற்கு ஆர்டிஓ விசாரணை நடத்தி வந்தார். அதோடு மருத்துவர்கள் வழங்கிய பிரதே பரிசோதனை அறிக்கையையடுத்து ரமணியின் கணவர் சஞ்சையிடம் பேரூர் காவல்துறை துணை ஆணையர் ராஜபாண்டி விசாரணை மேற்கொண்டார். அத்துடன் ரமணியின் தந்தை சஞ்சயின் தந்தை மற்றும் தாய் உள்ளிட்டோரிடம் தனித்தனியே விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

துணை ஆணையர் ராஜபாண்டியின் தீவிர விசாரணையில் புதுமணப்பெண் ரமணியை அவருடைய கணவர் சஞ்சய் கழுத்தை நெரித்து கொலை செய்த தகவல் கிடைத்தது. திருமணம் முடிந்த நிலையில் சஞ்சய் வேறொரு பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இது தொடர்பாக சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் ஆத்திரம் கொண்ட சஞ்சய் மனைவி ரமணியின் கழுத்தை நெறித்துள்ளார் இதனால் ரமணி மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து சஞ்சய் தன்னுடைய பெற்றோருடன் தெரிவித்துவிட்டார். ஆகவே என் மகனின் கொலையை மறைப்பதற்காக ராமனின் வாயில் சாமி பவுடரை கரைத்து தற்கொலை செய்து கொண்டதை போல நாடகமாடி இருக்கிறார்கள். இந்த தகவல் காவல்துறை விசாரணையும் தெரிய வந்தது இதனைத் தொடர்ந்து, சஞ்சய், அவருடைய தந்தை லட்சுமணன், தாய் அம்மு குட்டி என்கின்ற பக்ரூ நிஷா உள்ளிட்ட 3️ பேரும் கைது செய்யப்பட்டனர்

Next Post

கொடநாடு வழக்கில் சூடுபிடிக்கிறது சிபிசிஐடி விசாரணை…..! கொடநாடு முதல் கேரளா வரை…..!

Thu Jun 1 , 2023
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக விசாரணை நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி 1500 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையின் நகல் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரும் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் சிபிசிஐடி காவல்துறையினர் கேரள மாநிலத்திலும் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த […]

You May Like