மதுரை அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சார்ந்தவர் பேச்சியம்மாள் 80 வயதான இவர், சம்பவம் நடந்த இரவு அன்று தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார். காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது 55 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென மூதாட்டியின் மீது பாய்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த பேச்சியம்மாள் பயத்தில் அலறி இருக்கிறார் அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே பாட்டியின் மீது பாய்ந்த அந்த நபர் ஓடிவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியில் மயக்கம் அடைந்த பாட்டியை அருகில் இருந்தவர்கள் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.
காவல்துறையின் விசாரணையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபர் பெயர் பாண்டி என்பதும் 55 வயதான அந்த நபர் அதை ஊரைச் சார்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையிலடைத்து விசாரணை செய்து வருகின்றனர். 80 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த வயதானாலும் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.