நெல்லை அருகே மது ஊற்றிக் கொடுத்து புதுச்சேரி இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மானூரை அடுத்த வெங்கலபொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (37). இவருக்கு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரயில்வே கார்டாக பணியாற்றி வருகிறார். ரயில் பணியில் கேரள மாநிலத்துக்கு செல்லும்போது புதுச்சேரியை சேர்ந்த 29 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண், திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை செய்துள்ளார். ரயிலில் வரும்போது சுபாசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். இந்நிலையில் பார்ட்டி வைப்பதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். போதை ஏறியதும் இளம்பெண் மயக்கத்தில் இருந்துள்ளார். அப்போது அவரை சுபாஷ், தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அவரது நண்பரான ரஸ்தா பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முருகேசன் (37) என்பவரையும் அழைத்து அவரும் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. போதை தெளிந்த இளம்பெண், சுபாஷ் மற்றும் முருகேசன் பிடியில் இருந்து தப்பி நெல்லை மாநகர காவல் துறையில் புகார் செய்தார். அதனைத்தொடர்ந்து ரயில்வே கார்டு, அரசு பஸ் டிரைவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Read more : பத்ம பூஷண் விருது பெறும் நடிகர் அஜித்குமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து..!!