fbpx

“மூக்கில் வழிந்த ரத்தம்” காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற காவலரின் மகள்! சுருண்டு விழுந்து பரிதாபம்!

‌தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சலுடன் பள்ளிக்கு சென்ற சிறுமி மூக்கிலிருந்து ரத்தம் வடிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி பகுதியைச் சார்ந்தவர் சுரேந்திரன். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஜெபா ரோஸ்லின் ஏழு வயதான அந்தச் சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

குழந்தைக்கு கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் இருந்து வருகிறது ஆனாலும் பொது தேர்வுகள் நடைபெற்று வருவதால் பெற்றோர் குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை காய்ச்சலுடன் பள்ளியில் இருந்த ஜெபா ரோஸ்லின் மறுபடியும் மூக்கிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார் இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் ஜெபா ரோஸ்லின் பெற்றோரை அழைத்து குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

Baskar

Next Post

தமிழகத்திலும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..? மருத்துவத்துறை அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்..

Wed Apr 12 , 2023
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் போது பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 7,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா […]

You May Like