fbpx

“ஒழுங்கா ட்ரெஸ் இல்லாம வீடியோ கால் பண்ணு” சிறுமியை மிரட்டிய நபர்; பெண்களுக்கு போலீஸ் விடுத்த எச்சரிக்கை!!!

தற்போது உள்ள காலகட்டத்தில், சிறுவர்கள் தான் செல்போனிற்கு அடிமையாகி உள்ளார்கள் என்று சொல்லலாம். அந்த வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமி ஒருவர், அதிக நேரம் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, அவருக்கு தெரியாத இன்ஸ்டா ஐடியிலிருந்து நட்பு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, சிறுமி அந்த நபருடன் நட்பாகப் பேச தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில், அந்த நபர் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, காதலை ஏற்க மறுத்து விட்டாள்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர், சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து, சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டியுள்ளார். அது மட்டும் இல்லாமல், ஆடை இல்லாமல் வீடியோ கால் செய்யுமாறு மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறிஅழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் உடனடியாக புதுச்சேரி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் தியாகராஜன் புகாரின் அடிப்படையில், போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.

இந்நிலையில், மீண்டும் சிறுமியைத் தொடர்பு கொண்ட அந்த நபர், ‘நீ கடலூர் வரவில்லை என்றால், உன் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவேன்’ என்று மீண்டும் மிரட்டியுள்ளார். மேலும், அவர் சொன்னதைப் போல், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை அவர் சிறுமிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சைபர் கிரைம் பிரிவு காவல் நிலைய ஆய்வாளரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். இதனால், அந்த நபர் சிறுமியை வரச் சொன்ன இடத்திற்கு போலீசார் சிறுமியை அழைத்துச் சென்றனர்.

பின்னர், அங்கு வைத்து சிறுமியை மிரட்டி வந்த முஜீப் அலியை கையும் களவுமாக பிடித்தனர். இதனிடையே, அந்த நபரின் செல்போனை ஆய்வு செய்ததில், சிறுமியின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்ததில்,​ பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த ​​2020 முதல், அவர் பல்வேறு பெண்களுக்கு இதுபோன்று அழைப்பு விடுத்து தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, பல பெண்களை வீடியோ காலில் ஆடையில்லாமல் பேச சொல்லி மிரட்டி, அதனை பதிவு செய்து வந்துள்ளார். இதற்காக, அவர் 10க்கும் மேற்பட்ட போலி இன்ஸ்டாகிராம் ஐடிகளையும், ஐந்துக்கும் மேற்பட்ட பேஸ்புக் ஐடிகளையும் பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய எஸ்எஸ்பி நாரா சைதன்யா, “சமூக ஊடகங்களில், தெரியாத நபர்களிடமிருந்து நட்பு கோரிக்கைகள் வந்தால் அதை ஏற்க வேண்டாம். நிர்வாண புகைப்படங்கள் எடுப்பதும் வீடியோ அழைப்புகள் செய்வதும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் ஏதேனும் மிரட்டல்கள் வந்தால், உடனடியாக நீங்கள் நம்பும் ஒருவரிடம் தெரிவிக்கவும். 1930 என்ற எண்ணை அழைத்து காவல் நிலையத்தை ஆன்லைனில் தொடர்பு கொள்வது முக்கியம்” என்றார்.

Read more: ஆசையாய் முதலிரவிற்கு சென்ற புதுமணப்பெண்; உள்ளே சென்றதும், கணவரின் குடும்பத்தினர் செய்த கொடூரம்..

English Summary

police warned woman to be careful f accepting follow request from strangers

Next Post

இந்தோனேசியா ஜாவா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளம் : பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

Fri Jan 24 , 2025
Landslides, floods in Indonesia's Java island: death toll rises to 21

You May Like