fbpx

ரெடி…! அரசு விரைவுப் பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…!

அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பொங்கலையொட்டி, வெளியூர்களுக்கு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் 5 பேருந்து நிலையங்களுக்கு, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சிறப்பு பேருந்துகள் மூன்று நாட்களுக்கு இயக்கப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், பொது மக்களின் வசதிக்காக வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் பூவிருந்தவல்லி Bye Pass, தாம்பரம் புதிய பேருந்து நிலையம் (MEPZ) & தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஆண்டு தோறும் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் 2024-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13ம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரி 15 – 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Vignesh

Next Post

100 நாள் வேலை திட்டம்..!! உங்களை ஏமாத்துறாங்களா..? இனி நீங்களே நிலுவைத்தொகையை பார்க்கலாம்..!!

Wed Dec 13 , 2023
திமுக துணைப் பொதுச்செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியில், “நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை மற்றும் இத்திட்டத்திற்கான உபகரணங்களுக்கான நிலுவைத் தொகை ஒவ்வொரு மாநில வாரியாக விவரம் தேவை உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை […]

You May Like