Pope Francis: போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், இரத்தப் பரிசோதனைகளில் சிறுநீரக செயலிழப்புக்கான லேசான அறிகுறிகள் தென்பட்டதாகவும் வாடிகன் தேவாலயம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய், வைரஸ், பாக்டீரியா, பூச்சை ஆகிய தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டறிந்த மருத்துவர்கள், பின்னர் இரண்டு நுரையீரல்களும் நிம்மோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். சனிக்கிழமை மாலை முதல் சுவாசக் கோளாறுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தற்போது, இரத்த பரிசோதனைகளில் “ஆரம்ப, லேசான, சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் தென்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஆக்ஸிஜனைப் பெற்று வரும் போப் பிரான்சிஸ், ஞாயிற்றுக்கிழமை காலை ஜெமெல்லி மருத்துவமனையின் 10வது மாடியில் அமைக்கப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து புனித திருப்பலியில் பங்கேற்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை கவனித்துக் கொண்டிருந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.
சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் சில கிருமிகள் ரத்த ஓட்டத்தை பாதித்துள்ளதாகவும் அதன் பக்க விளைவாக உடல் உறுப்புகளின் செயல்திறனை குறைத்து மரணத்தை ஏற்படுத்தும் செப்சிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், போப் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ள வாடிகன் தேவாலயம், அதிக ஆக்சிஜன் தேவைப்படுவதால் செயற்கை சுவாசமும் பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ரத்த மாற்று சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
Readmore: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்!. மீட்புப் பணி தீவிரம்!. ராஜஸ்தானில் தொடரும் சோகம்!.