fbpx

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பிய நபர்களுக்கு…! அஞ்சல் அலுவலகத்தின் சூப்பர் திட்டம்…!

சென்னை மத்திய கோட்டத்தின் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை மத்திய முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் முகவர்களாக முடியும். இந்த தகுதியை பெற்றுள்ள விருப்பமுடையவர்கள் இதற்கான நேர்காணலில் பங்கேற்கலாம். 22.11.2023 அன்று காலை 10 மணிக்கு இந்த நேர்காணல் நடைபெற உள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம், எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 (பாண்டி பஜார் அருகில்) என்ற முகவரியில் நேர்காணல் நடைபெற உள்ளது.

தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வங்கிக் கணக்கில் திடீரென வந்து விழுந்த ரூ.820 கோடி..!! வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!!

Fri Nov 17 , 2023
அதிர்ஷ்டம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுக்கும் என பல பலமொழிகளை சொல்லிக் கொண்டே போகலாம். அதிர்ஷ்டம் வந்துவிட்டால், நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் கூட நடக்கலாம். அப்படி ஒரு சம்பவம்தான், தற்போது நடந்துள்ளது. வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் தவறாக டெபாசிட் செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில், யூகோ வங்கி வாடிக்கையாளர்கள் சிலரின் வங்கிக் கணக்கில் 820 கோடி ரூபாய் பணம் விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. இந்த பணம், […]

You May Like