கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுப்பெறும் புயல், நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும், பிறகு கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து நாளை அல்லது 5-ம் தேதி ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலானது கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: திங்கட்கிழமை (டிசம்பர் 04) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போல தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் நேரடி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கட்கிழமை (04.12.2023) நடைபெறுவதாக இருந்தது. கனமழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.