fbpx

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தள்ளிவைப்பு..!! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று தொடங்கவிருந்த பொதுமாறுதல் கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வழியாக மே 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இதற்கிடையே, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்குமாறு உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதேநேரத்தில், பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் சார்பிலும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார், தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி ஆகியோர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. தற்போது நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுகிறது. மேலும், கலந்தாய்வுக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும். இந்த தகவலை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

சேலம் அருகே காசு வெல்டிங் மூலமாக ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் அதிரடி கைது…..! உதவி செய்தவரை பாராட்டிய போலீஸ்…..!

Mon May 8 , 2023
சேலம் அருகே கடையம்பட்டி ஜோடுகுளி என்ற பகுதியில் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி செல்வம்( 63) என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் 2 ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் ஒரு ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளை அடிக்க 3 பேர் முயற்சி செய்திருக்கிறார்கள். அப்போது ஒருவர் வெளியே பாதுகாப்புக்காக நின்றார் மற்ற இருவரும் காஸ் சிலிண்டரை வைத்து கேஸ் […]

You May Like