இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான மேற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி வர வாய்ப்பு உள்ளதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்று வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஜகார்த்தா நேரப்படி செவ்வாய்கிழமை அதிகாலை 03:00 மணிக்கு ஏற்பட்டது, இந்த நிலநடுக்கம் மென்டவாய் தீவுகள் மாவட்டத்தில் வடமேற்கே 177 கிமீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 84 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.