சீனாவில் இன்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சிச்சுவான் தலைநகர் செங்டுவில் இருந்து தென்மேற்கே சுமார் 180 கிமீ (111 மைல்) தொலைவில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் லுடிங் நகரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சாங்ஷா மற்றும் சியான் போன்ற தொலைதூர பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது..
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, லூடிங்கிற்கு அருகிலுள்ள யான் நகரில் 4.2 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது என்று நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
2013 ஆம் ஆண்டில், யான் ஒரு வலுவான பூகம்பத்தால் தாக்கப்பட்டது, 100 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..