இந்த வருடம் தொடங்கிய முதல் நாள் முதல் ஜப்பான் நாடு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் வந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை 2.48 மணிக்கு 6.7 ரிக்காதர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் நீளம் 126.38, ஆழம் 80 கிமீ எனவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதேபோன்று, பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சுனாமி தாக்கியது. இதன் காரணமாக பல பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.