fbpx

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது..

வடக்கு பிலிப்பைன்ஸில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது..

அந்நாட்டின் நேரப்படி காலை 8:43 மணிக்கு லூசோன் பிரதான தீவில் உள்ள ஆப்ரா மலைப் பிரதேசத்தில் உள்ள டோலோரஸுக்கு கிழக்கு-தென்கிழக்கே 11 கி.மீ தொலைவில் மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.. டோலோரஸ் பகுதியில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை வெளியே ஓடி, சாலைகளில் தஞ்சமைடைந்தனர்..

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு பகுதியாக கருதப்படும் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” மீது என்ற இடத்தில் அமைந்துள்ளதால் பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன..

Maha

Next Post

இ-நிர்வாக தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு...!

Wed Jul 27 , 2022
இ-நிர்வாக தேசிய விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு துறை, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து இ-நிர்வாக திட்டம் / முன் முயற்சி / தீர்வுகள் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 25-வது தேசிய விருதுகள் 2022 நவம்பரில்  வழங்கப்படவுள்ளன. 2021-22- ஆம் ஆண்டுக்கு டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு நடைமுறையில் சிறந்த மறுகட்டமைப்பு […]

You May Like