fbpx

10-ம் வகுப்பு வரையிலான பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டம்…! மத்திய அரசு தகவல்…!

இந்தியாவில் பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் இடைநிற்றலை குறைப்பதற்காக மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் மூலம் பழங்குடியின மாணவர்களுக்காக 10-ம் வகுப்பு வரையிலான கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் தொடக்க கல்வி முதல் இரண்டாம் நிலை கல்வி வரையிலான இடைநிற்றல் குறைந்துள்ளது. அம்மாணவர்கள் 9 மற்றும் 10-ம் வகுப்பில் கற்பது அதிகரித்துள்ளது.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறையின் அறிக்கையின் படி, கடந்த 2019-20-ம் ஆண்டில் 1 வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பழங்குடியின மாணவர்களின் மொத்த சேர்க்கை வீதம் 102.08 ஆக இருந்தது. அதே போல் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் படித்தவர்களின் சதவீதம் 2012-13-ம் ஆண்டில் 62.4 சதவீதமாக இருந்த நிலையில், 2019-20-ம் ஆண்டில் 76.7 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மலைமீது மோதி விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்!… கனவாகவே கரைந்த இளம்பெண்ணின் ஆசை!... என்ன நடந்தது?

Tue Mar 21 , 2023
மத்தியப் பிரதேச மாநிலத்தின் பலாகாட் அருகே மலை குன்றின் மீது மோதி பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் கேப்டன் மற்றும் பெண் பயிற்சி விமானி இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் காந்திதாம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் விரிக்ஷனா மகேஸ்வரி. பெரும் தொழிலதிபரின் மகளான இவர் விமானி ஆக வேண்டும் என்ற ஆசையில் IGRAU (Indira Gandhi Rashtriya Uran Akademi) பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். இந்நிலையில், […]

You May Like