பதப்படுத்தப்படாத பாலை கர்ப்பிணிகள் குடிப்பதால் வயிற்றில் வளரும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளவேண்டிய பானங்கள் குறித்து பார்க்கலாம்.
கர்ப்பக்காலங்களில் பெண்கள் தனது ஆரோக்கியத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி உணவு பழக்கங்களை கையாளவேண்டும். குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளையும் கவனத்துடன் எடுத்துகொள்வது அவசியமாக உள்ளது. அந்தவகையில் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் மது பானங்களை எடுத்துக்கொள்வது, குறை பிரசவம், பிறப்பு குறைபாடுகள், குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்படாத பாலில் (Unpasteurized milk) குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து மற்றும் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. எனவே, பதப்படுத்தப்படாத பால்களை கர்ப்பிணி பெண்கள் எடுத்துக்கொள்வது நல்லது அல்ல.
காஃபினேட் பானங்கள் இளைஞர்கள் அதிகம் விரும்பும் ஒரு பானம் ஆகும். குழந்தைகளுக்கு ஆகாத பானங்களில் ஒன்றான இந்த பானத்தை கர்ப்பிணிகள் தவிர்த்தல் நல்லது. கர்ப்ப காலத்தின் போது பெண்கள், புதிய (fresh) பழங்களை கொண்டு தயாரிக்கப்படும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கடையில் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளை எடுத்துக்கொள்ள கூடாது. அவை, பாட்டில்களில் நீண்ட நாள் கெடாமல் இருக்க அதில் அமிலங்கள் கலக்க பட்டிருக்கும். இவை கருவில் உள்ள குழந்தைக்கு ஆரோக்கியமானது அல்ல.செயற்கை இனிப்புகள் கொண்ட பானங்களை கர்ப்பிணி பெண்கள் முழுவதுமாக தவிர்த்தல் நல்லது. அந்த வகையில் செயற்கை இனிப்புகள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படும் டயட் சோடாக்களை தவிர்த்தல் நல்லது.