fbpx

“ கோபத்தால் நடந்தது அல்ல.. திட்டமிட்ட வன்முறை..” கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பிளஸ்2 மாணவி ஸ்ரீமதி, கடந்த 13-ம் தேதி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர், உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று நடந்த இந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிய போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் தீவைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் 15 நாட்களுக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..

இதனிடையே மாணவி தற்கொலை தொடர்பாக பள்ளி, முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்ட நிலையில் ஹரிப்பிரியா, கிருத்திகா என்ற 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்..

இதனிடையே மாணவியின் மரணத்தில் உள்ள உண்மை கண்டறிய வேண்டும், மீண்டும் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா, என மாணவியின் தந்தைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.. மேலும் கள்ளக்குறிச்சியில் போராட்டம் நடத்துவதற்கு யார் அனுமதி அளித்தது என்றும் வினவினார்.. மேலும் மாணவர்களின் டிசியை எரிக்க உரிமை அளித்தது யார் என்றும் கேள்வி எழுப்பினார்..

அப்போது கள்ளக்குறிச்சியில் நடந்த வன்முறைக்கும் பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மனுதாரர் தரப்பு விளக்கமளித்தது.. தொடர்ந்து பேசிய நீதிபதி “ சின்னசேலத்தில் நடந்தது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல.. திட்டமிட்ட வன்முறை போல் தெரிகிறது.. இந்த வன்முறையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்.. மேலும் காவல்துறையினர் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்றும், சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்..

இந்த வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும் என்று நீதிபதி தெரிவித்தார்.. மேலும் வன்முறை சம்பவம் குறித்து சிறப்பு படை அமைத்து விசாரணை நடத்தி வன்முறையாளர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்..

Maha

Next Post

அதிர்ச்சி..!! ஜீன்ஸ் உடைக்கு கட்டுப்பாடு விதித்த கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி..!

Mon Jul 18 , 2022
ஜீன்ஸ் உடை அணியக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்த கணவரை கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் உள்ள ஜோர்பிதா என்ற கிராமத்தில் புஷ்பா ஹெம்ப்ரோம் என்ற பெண் வசித்து வருகிறார். இவர், கோபால்பூர் கிராமத்தில் நடைபெற்ற கண்காட்சியைப் பார்ப்பதற்காக ஜீன்ஸ் உடை அணிந்து சென்றிருக்கிறார். பின்னர், கண்காட்சி முடிந்து வீடு திரும்பிய அவரை கணவர் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே […]

You May Like