fbpx

அதிமுக பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்..! ஒரு பேனரில் கூட இடம்பெறாத ஓபிஎஸ்..!

அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீவாரு மண்டபத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எழுந்த உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நாளை நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கின் இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்ட வழக்கை முன்கூட்டியே விசாரிக்க  முடியாது: சென்னை நீதிமன்றம் | Will there be a problem for the AIADMK  general body meeting ...

இந்நிலையில், நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்டபத்தின் அரங்கத்தில் கடந்த முறை நடைபெற்ற பொதுக்குழு, தற்போது மண்டபத்தின் திடலில் நடைபெறுகிறது. சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை முதல் மண்டபம் அமைந்திருக்கும் இடம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அடங்கிய பேனர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு மற்றும் செயற்குழுவுக்காக பிரம்மாண்டமாக தனித்தனி மேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவருக்கும் தனித்தனியாக இருக்கைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மருத்துவர் சாந்தா மரணச் செய்தி வேதனையும்‌, அதிர்ச்சியும்‌ தருகிறது‌:  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்! - Simplicity

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் 9.15 மணிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீவாரு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாளைய அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பேனர்கள் அமைக்கும் பணி தீவிரம்.. பிரம்மாண்டமாக தயாராகும் அதிமுக பொதுக்குழு  ஏற்பாடுகள் | AIADMK General Body Meeting Intensity of work on setting up  set banners ...

கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பது போன்ற பேனர்கள் முழுவதுமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு பேனரில் கூட ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தொலைதூர ஆன்லைன் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..! அண்ணா பல்கலைக்கழகம்

Sun Jul 10 , 2022
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூர ஆன்லைன் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் வாயிலாக எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி.(கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் வழங்கப்படுகின்றன. பொது மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை, விற்பனை மேலாண்மை உட்பட 8 பாடப்பிரிவுகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ. படிப்பில் நடப்பு ஆண்டில் சேர ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ‘டான்செட்’ அல்லது தொலைதூரக் கல்வி நுழைவுத் […]
பி.இ., பிடெக் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.50,000 சம்பளத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like