fbpx

6 புதிய ஆளுநர்கள் நியமனம், 3 ஆளுநர்கள் மாற்றம்..! குடியரசுத் தலைவர் மாளிகை அதிரடி…!

ஜனாதிபதி திரௌபதி முர்மு பல்வேறு மாநில கவர்னர் நியமனங்களை அறிவித்துள்ளார். அதன்படி, லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, மணிப்பூரின் கூடுதல் பொறுப்புடன் அசாம் கவர்னராகவும், பன்வாரிலால் புரோஹித்துக்கு பதிலாக குலாப் சந்த் கட்டாரியா பஞ்சாப் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்ட அறிக்கையில், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட கட்டாரியாவுக்குப் பதிலாக ஆச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் கவர்னர் மற்றும் சண்டிகர் ஆளுநர் பதவியில் இருந்து புரோகித்தின் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். மேலும்”சிக்கிம் கவர்னர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் கவர்னராக நியமிக்கப்பட்டார், மணிப்பூர் கவர்னராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக ராதாகிருஷ்ணனுக்குப் பதிலாக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகாவும், மேகாலயா ஆளுநராக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

English Summary

8 state governors change including Puducherry

Vignesh

Next Post

தமிழகத்திற்கு ரயில்வே பட்ஜெட் 8 மடங்கு அதிகரிப்பு...!

Sun Jul 28 , 2024
8 times increase in railway budget for Tamil Nadu

You May Like