fbpx

மகிழ்ச்சி…! தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகம் செய்ய அனுமதி…!

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் எல்பிஜி எரிவாயுவை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களின் (பிஏசிஎஸ்) செயல்பாடுகளை விரிவுபடுத்தி, அதன் மூலம் அவற்றை நிதி ரீதியாக வலுவாகவும், நிலையானதாகவும் ஆக்குவதற்காக, அவை சமையல் எரிவாயு டீவர்ஷிப் பெற விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து பிஏசிஎஸ்-ஐ சமையல் எரிவாயு விநியோகஸ்தராக தகுதி பெறச் செய்துள்ளது.

விரிவான அடிமட்ட கட்டமைப்புடன், கிராமப்புற சமூகங்களிடையே நம்பிக்கையுடன் செயல்படும் பிஏசிஎஸ், தொலைதூரப் பகுதிகளில் எல்பிஜி விநியோகத்தில் உள்ள இடைவெளியைக் குறைக்க நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சி எல்பிஜி விநியோகத்தை பரவலாக வழங்குவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், தொலைதூர விநியோகஸ்தர்களை சார்ந்திருப்பதைக் குறைக்கும். கிராமப்புற குடும்பங்களுக்கு வசதியை மேம்படுத்தும்.

பிஏசிஎஸ்கள் மூலம், சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படுவதால், விவசாயிகளின் நேரமும். உழைப்பும் வீணாவது தடுக்கப்படும். இந்த நேரத்தை அவர்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Primary Agricultural Credit Societies allowed to distribute LPG gas

Vignesh

Next Post

இந்த நாட்டில் நிலம், மின்சாரம், தண்ணீர், கல்வி ஆகியவை இலவசம்.. ஆனால் இந்த ஒரு விதியை பின்பற்ற வேண்டும்…

Thu Dec 19 , 2024
Do you know of a country that provides land, electricity, water, and education for free?

You May Like