தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் , இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விதிகள் 2011ன் படி தேவையின் அடிப்படையில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் குறித்த விபரத்தையும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய விபரத்தையும் கூகுள் வரைபடத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
புவியியல் தகவல் உரிமை பயன்படுத்தி தாவியின் அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வள மையத்தைச் சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்குவதற்கான இடம் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் வசூல் வரைபட சான்று இணைக்கப்பட வேண்டும் புல வரைபடத்தில் பள்ளிக்கான இடம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். சிட்டா பட்டா போன்ற நிலம் சார்ந்த ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் பள்ளி இடம் சார்ந்த விபரங்கள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும். நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய பள்ளிக்கு கட்டிட வசதி கூடுதல் வகுப்பறைக்கான இடவசதி கழிப்பறை வசதி குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விபரங்கள் அளிக்கப்பட வேண்டும். புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கும் போது போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். மேலும் புதிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியாக தரம் முயற்சி வழங்கிய தேவை இல்லை என்றாலும் அது குறித்த விவரத்தையும் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.