fbpx

பிரதமர் – ஜன்மன் திட்டம்… ரூ.24,000 கோடி பட்ஜெட்டில் தொடக்கம்…!

பிரதமர்-ஜன்மன் திட்டத்தின் கீழ் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் முதலாவது தொகுப்பைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ஒப்படைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர்-ஜன்மனின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். கடைக்கோடியில் உள்ள கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் அந்தியோதயாவின் தொலைநோக்குப் பார்வையுடனான பிரதமரின் முயற்சிகளுக்கு இணங்க, குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடிக் குழுக்களின் (பி.வி.டி.ஜி) சமூக-பொருளாதார நலனுக்காக 2023, நவம்பர் 15 அன்று பழங்குடிமக்கள் கெளரவ தினத்தை முன்னிட்டுப் பிரதமர்-ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது.

சுமார் ரூ.24,000 கோடி பட்ஜெட்டுடன், 9 அமைச்சகங்கள் மூலம் 11 முக்கியமான தலையீடுகளில் இது கவனம் செலுத்துகிறது. வீடுகள் மற்றும் குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, மின்சாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதார வாய்ப்புகளுடன் நிரப்புவதன் மூலம் குறிப்பாக பாதிக்கப்படும் பழங்குடிக் குழுக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

Vignesh

Next Post

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு நீங்க வேண்டுமா.! இந்த ஒரு இலையை பயன்படுத்துங்க போதும்.!?

Mon Jan 15 , 2024
தற்போதைய காலகட்டத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பினால் அவதியுற்று வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு டயட் முறைகளையும் பின்பற்றி வருகின்றனர். ஒரு சில தவறான டயட் முறைகளினால் மேலும் உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் நோய்களோடும் போராடுகின்றனர். இவ்வாறு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன், முறையான உடற்பயிற்சியும், அன்றாட  பழக்கவழக்கங்களில் ஒரு சிலவற்றை மாற்றிக்கொள்வதுமே தீர்வாக அமையும். இதன்படி வெற்றிலை உடல் எடையை குறைப்பதற்கு […]

You May Like